தவெக vs திமுக என்பதுதான் ஃபைனல்; அ.தி.மு.க-வை அட்டாக் செய்ய வேண்டாம்; ஆதவ் அர்ஜுனா..!
Aadhav Arjuna says not to attack the AIADMK
தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம் என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
அதாவது, தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும் ஃபோகஸ் செய்யுங்கள், அதிமுகவை அட்டாக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அக்கட்சி எந்தக் கூட்டணி உருவாக்கினால் நமக்கென்ன? என்று கேள்வி எழுப்பியதோடு, இன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வேங்கை வயல், வடகாடு, மதுரையில் கொடிக்கம்பம் ஏற்றும் சர்ச்சை உள்ளிட்டவையில் திருமாவளவனுக்கு இந்த ஆட்சியில் என்ன மரியாதை கொடுக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமாவின் மனசு எனக்கு தெரியும், என்னுடைய மனசு திருமாவுக்கு தெரியும், ஒரு காலத்திலும் எங்களுக்குள் பிளவு ஏற்படாது. பாஜகவின் பி டீம் என்று தவெகவை திமுகவினர் கூறுகின்றனர், ஆனால், பாஜகவின் பி டீம் திமுகதான் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
English Summary
Aadhav Arjuna says not to attack the AIADMK