தெலுங்கானாவில் கொடூரம்; வேறு ஜாதி இளைஞனை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு; மயக்க ஊசி செலுத்தி கொலை செய்த நர்ஸ்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் காதலனை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெற்றோரை நர்ஸ் ஒருவர் மயக்க ஊசி செலுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தில் 23 வயதைச் சேர்ந்த நர்ஸ்க்கு சமூக வலைத்தளம் மூலம் ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.  

இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பெற்றோர் வேறு சாதி பையனை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களை தீர்த்து கட்டி, காதலனை எப்படியாவது தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று, தான் பணிபுரியும் மருத்துவமனையில் இருந்து மயக்க மருந்து மற்றும் ஊசி ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து, தனது பெற்றோரிடம் தங்களுடைய வலி நிவாரணத்திற்கான ஊசி போடுகிறேன் என்று சொல்லி நைசாக பேசியுள்ளார். பின்னர் பெற்றோருக்கு வலிக்காக மயக்க ஊசியை போடுகிறேன் என்று சொல்லி ஊசியை செலுத்தியுள்ளார். அதிக டோஸ் செலுத்தியதால் பெற்றோர்கள் மயக்க நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெற்றோர் இறந்த பின்னர், தனது சகோதரருக்கு போன் செய்து, விவசாயக் கடன் கட்ட முடியாததால் பெற்றோர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால், சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட, போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெற்றோரை கொலை செய்ததை நர்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A nurse injected her parents with a sedative and killed them for opposing her marriage to a man from a different caste


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->