டெல்லி செங்கோட்டையில் களை கட்டிய சுதந்திர தின விழா..12 வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் . கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது . இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டு இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

காலை 7.30 மணிக்கு தொடங்கிய சுதந்திர தின விழா புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.

அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது.

அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்றனர்.இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். 
கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது. 

முன்னதாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Independence Day celebration held in Delhis Red Fort Prime Minister Modi hoisted the national flag for the 12th time


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->