“அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது” - பிரதமர் மோடி திட்டவட்டம்!
India will not be intimidated by nuclear threats Prime Minister Modi asserts
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா எப்போதும் அஞ்சாது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் புதிய இயல்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பிரதமர் மோடி கூறியதாவது:- இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, ஆபரேஷன் சிந்தூரின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் பஹல்காமிற்கு வந்து, அவர்களின் மதத்தைக் கேட்ட பிறகு மக்களைக் கொன்றனர்.அத்தகைய படுகொலையால் முழு உலகமும் அதிர்ச்சியடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் 22 ஆம் தேதிக்குப் பிறகு, நமது ஆயுதப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம்.
நாங்கள் எதிரி மண்ணுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம்...10 ஆண்டுகளாக நடக்காத ஒன்றை நமது ராணுவம் நடத்திக் காட்டியது. பாகிஸ்தானில் அழிவு மிகப் பெரியது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா எப்போதும் அஞ்சாது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் புதிய இயல்பை பிரதிபலிக்கிறது.நாம் இப்போது ஒரு புதிய இயல்பை உருவாக்கியுள்ளோம். எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும்.
சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.எதிரி நாட்டு விவசாய நிலங்களுக்கு நமது தண்ணீர் கிடைக்க கூடாது. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம்இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
India will not be intimidated by nuclear threats Prime Minister Modi asserts