இந்த தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு!
Independence Day PM Modi Announce diwali
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் தில்லி செங்கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றினார். அப்போது, வரும் தீபாவளிக்கு மக்களுக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக அறிவித்தார்.
மோடி, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வெற்றிகரமாக திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி, விரைவில் இந்தியா சொந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் திட்டம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும், ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றும், இதன் மூலம் சிறு மற்றும் குறு தொழில்கள் பெரிதும் பயன்பெறும் என்றும் கூறினார். சீர்திருத்தத்திற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனவும், லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயரும் எனவும் தெரிவித்தார். வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்கள் பயன்பெறும்; மேலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம், மக்களுக்காக செயல்படுவதே அரசின் குறிக்கோள் எனவும் மோடி வலியுறுத்தினார்.
English Summary
Independence Day PM Modi Announce diwali