ஹரியானாவில் ரூ.1.17 கோடிக்கு ஏலம் போன உயர்ந்த கார் பதிவெண்: அப்படி என்ன நம்பர் அது..?
The highest car registration number auctioned for one crore and seventeen lakh rupees in Haryana
ஹரியானா மாநிலத்தில் விஐபி அல்லது பேன்சி வாகன பதிவெண்கள் ஏல முறையில் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 09 மணி வரை , வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பமான எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் நடக்கும் இந்த ஏலத்தின் முடிவுகள் புதன் மாலை 05 மணிக்கு அறிவிக்கப்படும்.
அதன்படி, இந்த வாரம் HR 8 B 8888 என்ற கார் பதிவெண் ஏலத்துக்கு வந்தது. இதற்கு 45 பேர் விண்ணப்பம் செய்து இருந்த நிலையில், ஆரம்ப விலையாக 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் 88 லட்ச ரூபாயாக இருந்த இந்த பதிவெண்ணின் விலை, மாலை 05 மணிக்கு 1.17 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் HR 22 W 2222 என்ற பதிவெண் 37.91 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், கேரளாவை சேர்ந்த கோடீஸ்வரர் வேணு கோபாலகிருஷ்ணன், தனது லம்போர்கினி காருக்காக KL 07 DG 0007 என்ற பதிவெண்ணுக்காக 45.99 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The highest car registration number auctioned for one crore and seventeen lakh rupees in Haryana