'கறை படிந்த வரலாறை கொண்ட பாகிஸ்தான், மற்றவர்களுக்கு பாடம் எடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை'; இந்தியா பதிலடி..!
India responded by saying that Pakistan has no moral right to take lessons from others
மதவெறி, அடக்குமுறை மற்றும் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவதில் ஆழமான கறை படிந்த வரலாறை கொண்ட நாடாக உள்ள பாகிஸ்தான், மற்றவர்களுக்கு பாடம் எடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம், உத்தர பிரதேசத்தில், அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி காவிக்கொடி ஏற்றியதை பாகிஸ்தான் விமர்சனம் செய்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளை அறிந்துள்ளோம். அவற்றை நிராகரிக்கிறோம் என்றும், மதவெறி, அடக்குமுறை மற்றும் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவதில் ஆழமான கறை படிந்த வரலாறை கொண்ட நாடாக உள்ள பாகிஸ்தான், மற்றவர்களுக்கு பாடம் எடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாசாங்குத்தனமான உபதேசங்களை வழங்குவதற்கு பதில், பாகிஸ்தான் தனது கவனத்தை திருப்பி, சொந்த நாட்டில் நடக்கும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்துவது நல்லது என்று அறிவுரை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து வெங்கேடச இடைக்கால அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரன்தீர் ஜெயிஸ்வால் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான கோரிக்கை வந்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து வருகிறோம் துன்று தெரிவித்துள்ளார்.
மேலும், வங்கதேச மக்களுக்கு உதவ நாங்கள் உறுதி பூண்டுள்ளதாகவும், இது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது குறித்து நீதித்துறை மற்றும் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
India responded by saying that Pakistan has no moral right to take lessons from others