ஆந்திராவில் அதிர்ச்சி.! மகனின் தலையை வெட்டி, பையில் வைத்து ஊர் சுற்றி தந்தை..! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தில் மது குடிக்க பணம் தராததால் தந்தை மகனின் தலையை வெட்டி பையில் வைத்து சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் குள்ளப்பாவை பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வீரய்யா. இவரது மனைவி அலிவேலம்மா, குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் அசோக் (25). இந்நிலையில் அசோக்கின் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அசோக்கும், அவரது தந்தை வீரய்யாவும் வீட்டில் இருந்தனர்.

இதையடுத்து அலிவேலம்மா, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மகனின் வங்கிக் கணக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். இதனால் வீரய்யா மனைவி அனுப்பி வைத்த பணத்திலிருந்து குடிப்பதற்காக மகனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அசோக் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில், தனித்தனியாக வெளியே சென்று இருவரும் மது அருந்தி விட்டு வந்த நிலையில், மீண்டும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வீரய்யா அருகில் கிடந்த கல்லை எடுத்து மகனின் தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அசோக் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வீரய்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகனின் தலையை தனியாக வெட்டி ஒரு பொய்யில் போட்டுக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்த வீரய்யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father who cut off his son head keeps it in a bag and roams the village in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->