'இளம் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கும் நோக்கில் பேசியதை ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளன''; தலைமை நீதிபதி விளக்கம்..! - Seithipunal
Seithipunal


நீதிமன்றத்தில் தான் தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற ஐநா சர்வதேச வர்த்தக சட்ட ஆணையத்தின் மாநாட்டில் பேசிய அவர் இது குறித்து கூறுகையில்; 

ஊடகங்கள் மாணவர்கள் போராட்டம் குறித்த எனது கருத்துகளைத் தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் நீதி வேண்டி வரும் அனைவருக்கும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கிறது. குறைகள் உள்ள எவரும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான உரிய நடைமுறைகளையும் வடிவத்தையும் பின்பற்றி வர வேண்டும் என்றும், நீதிமன்ற நடைமுறைகளை நன்கு அறிந்த வழக்கறிஞர்கள் முறையான மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி வரும் எந்தவொரு வழக்கைக்கும் நாங்கள் மறுப்பு தெரிவிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவசர வழக்கைக் காரணம் காட்டி, மனுவே தாக்கல் செய்யாமல் முறையிட்ட இளம் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கும் நோக்கில் தான் பேசியதையே ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவசரத் தேவை இருக்கும் பட்சத்தில் சிறப்பு கோரிக்கைகள் உடனடியாகப் பரிசீலிக்கப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை குறிப்பிடப்பட்ட இரு மனுக்கள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவர்களின் போராட்டம் மற்றும் சர்ச்சைகள் தொடர்பான பிற கேள்விகளுக்கு நீதிமன்ற விசாரணையின் போது பதிலளிப்பதாக கூறி, டெல்லியில் நடைபெற்ற ஐநா சர்வதேச வர்த்தக சட்ட ஆணையத்தின் மாநாட்டில் அவர் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Justice explained that the media has misrepresented what he said as advice to a young lawyer


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->