தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?  - Seithipunal
Seithipunal


காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை மணமகள் நிறுத்தியதால் இரு வீட்டு  குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ,பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முதுகலைப்பட்டம் பெற்ற பெண் ஒருவருக்கும்  நிச்சயம் செய்து  நேற்று காலை  திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தது.இதற்காக  இரவே மணமகள், மணமகன் வீட்டார் ஹாசனில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர்.அப்போது  மணமகளோ அமைதியாக இருந்துள்ளார்.

காலை முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார் அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். அப்போது மணமகன் , மணமகள் மணக்கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து புரோகிதர் மந்திரங்கள் ஓத  தாலியை எடுத்து, மணமகளின் கழுத்தில் தாலிக்கட்ட முயன்றபோது  மணமகளுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.அதனை தொடர்ந்து திடீரென்று மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறினார்,

மேலும்  நான் ஒருவரை காதலித்து வருகிறேன். எனது காதலன் தான் தற்போது செல்போனில் பேசி திருமணத்தை நிறுத்திவிட்டு வா. நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். நான் காதலனை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தன்பேரில்  இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது மணமகள் திட்டவட்டமாக திருமணம் செய்ய சம்மதிக்காததால், அவரது விருப்பப்படி விடும்படி போலீசார் கூறினர். இந்த முடிவால் மணமகன் வீட்டார் ஏமாற்றம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The bride who postponed the wedding during the waiting time Do you know what happened in the end?


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->