சிஆர்பிசி சட்ட விதிகளை மீறிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பீஹார் மாவட்ட நிர்வாகம் முடிவு..!
The Bihar district administration has decided to take action against Rahul for violating the provisions of the CrPC Act
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பீஹார் தர்பங்கா மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பீகாரின் சிஆர்பிசி சட்டத்தின் 163-வது விதிகளை மீறியதாக லோக்சபா குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்குள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. காங்கிரசின் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைக்க பீஹாரின் தர்பங்கா மாவட்டத்திற்கு ராகுல் சென்றிருந்தார்.

அப்போது அவர் அங்குள்ள அம்பேத்கர் மாணவர் விடுதிக்கு செல்ல திட்டமிட்ட நிலையில், அங்குள்ள மாணவர்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டார். ஆனால், வழியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ராகுல் கண்டனம் தெரவித்தார். அதாவது, இந்திய ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது. சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. என்றும் குறிப்பிட்டார்.அத்துடன், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பீஹார் அரசு என்னைத் தடுக்கிறது எனவும், நிதீஷ்குமார் பயப்படுவது ஏன் எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.

அத்துடன், ராகுல் காந்தி அங்கு தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிஆர்பிசி சட்டத்தின் 163-வது விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
The Bihar district administration has decided to take action against Rahul for violating the provisions of the CrPC Act