பயங்கரவாதிகள் இனி அவர்கள் வீடுகளில் இருக்க முடியாது..ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!
Terrorists can no longer stay in their homes Rajnath Singh warns
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அப்போது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உருவானது.இதற்டையே, கடந்த சனிக்கிழமை இரவு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கவர்னர் மனோஜ் சின்ஹாவுடன் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
பாதாமி கண்டோன்மென்டில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டதைத்தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியதாவது:-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும். பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்து இருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.பயங்கரவாதிகள் இனி அவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க முடியாது.
நேரம் வரும்போது கடினமான முடிவுகளை எடுப்போம் .பாதுகாத்து கொள்வது மட்டுமல்ல. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவும் தெரியும் . எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இனி எந்த தாக்குதல் நடவடிக்கையும் போராகதான் கருதப்படும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
English Summary
Terrorists can no longer stay in their homes Rajnath Singh warns