பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு...! காஷ்மீரில் ராணுவம் “ஆபரேஷன் பிம்பிள்” தீவிரம்...!
Terrorist infiltration foiled Army intensifies Operation Pimple Kashmir
பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ராணுவத்தினர் துல்லியமான துப்பாக்கிச் சண்டையால் இருவரை சுட்டுக்கொன்று பெரும் ஆபத்தைத் தடுத்துள்ளனர்.காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் திடீர் ஊடுருவலுக்கு திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் பிம்பிள்” எனப்படும் சிறப்பு ராணுவ நடவடிக்கையை வேகமாக தொடங்கினர்.இந்த நடவடிக்கை காஷ்மீரின் குப்வாரா மற்றும் ஜம்முவின் கேரன் செக்டர் பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது. மலைப்பகுதிகளில் ராணுவத்தினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு ராணுவத்தினர் மறுமொழி தாக்குதல் நடத்தினர். அதில் ஏற்பட்ட கடும் மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த தாக்குதலால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் “ஆபரேஷன் பிம்பிள்” நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எல்லை முழுவதும் கண்காணிப்பு மற்றும் ராணுவ ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Terrorist infiltration foiled Army intensifies Operation Pimple Kashmir