ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி! - Seithipunal
Seithipunal


ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க வேண்டும்!

மும்பையை சேர்ந்த நிலேஷா என்ற பெண்ணிடம் ஜெயிலர் பட்டத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஏமாற்றி உள்ளனர். அவரிடம் அறிமுகமான பியூஸ் ஜெயின் மற்றும் மந்தன் ருபேரல் ஆகியோர் நாங்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா கிரியேஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர்கள் என்றும் ரஜினி நடிக்கும் ஜெயிலர் மற்றும் ஆர்சி-15 என்ற படங்களை தயாரிப்பதாகவும் கூறியுள்ளனர். 

இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக அல்லது சைபர் ஹேக்கர் வேடத்தில் அடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளனர். மேலும் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக போலி ஆவணங்களை காட்டி அந்த பெண்ணிடம் கடந்த ஜூலை மாதம் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு நடிக்கவும் சம்மதம் வாங்கியுள்ளனர். 

பின்னர் பாஸ்போர்ட் சரிபார்ப்பு மற்றும் அரசு அனுமதி பெற சட்ட ரீதியான காரணங்களுக்காக பணம் தேவைப்படும் என்றும் அதற்காக ரூ.10 லட்சம் தர வேண்டும் என வாங்கியுள்ளனர். பணம் பெற்றுக் கொண்ட இருவரும் தற்பொழுது தலைமறைவாகிவிட்டனர். பலமுறை முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே தாம் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். பின்னர் மும்பை தகிசர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரியவருகிறது. 

விசாரணையில் கடந்த 2003ஆம் ஆண்டு பல தெலுங்கு படங்களை வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரித்துள்ளது தெரிய வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இருவரும் பண மோசடி செய்திருப்பது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ten lakh rupees fraud by claiming to give chance in Rajini film


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->