மும்பை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்.!!
ten kg gold seized in mumbai airport
மும்பை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சார்ஜா நாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது, அதிகாரிகள் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்ட இரண்டு பயணிகளின் உடைகள் மற்றும் உடமைகளை சோதனைக்குட்படுத்தினர். அதில், அந்த 2 பயணிகளும் தங்கள் உடைகளில் ரூ.4.94 கோடி மதிப்பிலான 8 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இவர்களோடு சேர்ந்து செயல்பட்ட மற்றொரு நபரையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து 3 பயணிகளையும் கைது செய்தனர்.
இதே போன்று துபாயில் இருந்து வந்திறங்கிய ஒரு பயணியிடம் இருந்து 2 கிலோ எடை கொண்ட ரூ.1.23 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு கடத்தல் சம்பவங்களின் மூலம் மொத்தம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
English Summary
ten kg gold seized in mumbai airport