3 வயது பச்சிளம் மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த கொடூர தாய்.. பதைபதைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கொலை செய்த தாயை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள ஜிடிமேட்டிலு பகுதியை சார்ந்தவர் உதயா (வயது 24). இவரது கணவர் சுரேஷ். இந்த தம்பதிகளுக்கு 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் கடந்த 2 வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த உதயாவிற்கு, கட்டிட வேலை பார்த்து வந்த பாஸ்கருக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் பல சமயங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு 3 வயது சிறுவன் தடையாக இருப்பதாக எண்ணி பலமுறை சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டு இருந்துள்ளான். 

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் சிறுவனை இரும்பு கம்பியால் அடிக்கவே, தாய் உதவும் இரக்கம் இன்றி இரும்பு கம்பியை வாங்கி சிறுவனை அடித்துள்ளார். இதனால் சிறுவன் துடிதுடித்து பலியாகி இருக்கிறான். மருத்துவமனையில் நல்லவள் போல குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருப்பதாக சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார். 

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கவே, குழந்தையின் உடலில் இருந்த காயத்தை வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் மற்றும் உதயாவிடம் விசாரணை செய்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Hyderabad Mother Kills Son due to Affair with Iron Rad Beating


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal