ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பாதிப்பா.? டெக் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்திரா கூறுவது என்ன..?
Tech Mahindra Chairman Anand Mahindra on the impact of the development of AI technology on the Indian IT sector
ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சியால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பாதிக்கப்படாது என டெக் மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
ஐடி நிறுவனங்களின் பணி மாறுபட்ட வடிவங்களில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏதோ ஒரு நாட்டில் உருவாக்கப்படும் ஏஐ வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் நாடாக மட்டும் இந்தியா இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டதோடு, அதை உருவாக்குபவராகவும், வடிவமைப்பவராகவும் நம்பகமான முறையில் செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தெப்போது ஏஐ காரணமாக ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதோடு, வேலைவாய்ப்பு குறையும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. இதனால் அத்துறை பங்குகள் விலை வெகுவாக குறைந்துள்ளதும் அத்துறையின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சூழலில், ஆனந்த் மகிந்திராவின் விளக்கம் கவனம் பேருள்ளது.
English Summary
Tech Mahindra Chairman Anand Mahindra on the impact of the development of AI technology on the Indian IT sector