ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இருபது நாடுகள் பங்கேற்ற அந்த மாநாட்டில் இந்தாண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்பட்டது. 

அதன் படி, ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவில் அடுத்தாண்டுக்கான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த மாநாட்டிற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, இந்த ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜி-20 கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது. 

மேலும், இந்த ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் முதல் நபராக அறிவித்த நிலையில், ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று இரவே அவர் சென்னை திரும்பவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu chief minister going to delhi for g20 conference meeting


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->