வாரிசுகளாக நாங்கள் வரவில்லை..!! திராவிடம் மாடல் ஆட்சி தேவையில்லை..!! ஸ்டாலினுக்கு பதிலடி தந்த தமிழிசை..!! - Seithipunal
Seithipunal


புதுவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி மலரும் என பேசி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் "திராவிட மாடல் தற்பொழுது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தமிழகத்தில் இருந்து 300 ஏக்கர் நிலம் மட்டும்தான் தற்பொழுது தேவை. 

புதுவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் முதலில் முதல்வர் ஸ்டாலின் நிலத்தை தரட்டும். திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை. புதுவையில் ஆளுநரின் தலையீடு உள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆளுக்கு ஆள் தலையீடு இருக்கும் தமிழக அரசை விட ஆளுநரின் தலையீடு இருப்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கு ஒற்றுமையாக ஆட்சி நடக்கிறது. அண்ணன் ஸ்டாலின் இங்கு பேசியது சரியில்லை. 

கர்நாடக மாநிலத்தில் தான் முதலமைச்சர் பொம்மை தலைமையிலான ஆட்சி நடக்கிறது, புதுவையில் அல்ல. முதலில் திராவிட மாடல் என்பதற்கு நல்ல தமிழ் பெயரை தமிழக முதல்வர் கண்டுபிடிக்கட்டும். அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பது தான் திராவிட மாடலோ? அரசியல் களத்தில் 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநில தலைவராக இருந்து தற்போது புதுவையின் ஆட்சிக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறோம். இங்கு நாங்கள் வாரிசுகளாக வரவில்லை" என பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai response to Stalin comment on pondicherry govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->