ரஷ்யாவுக்கு கடத்தப்படும் இளைஞர்கள்.. மூளையாக தமிழர்.. தட்டி தூக்கிய CBI.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு‌ மற்றும்‌ கேரளாவில் இருந்து ரஷ்ய நாட்டிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திய கும்பலை சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ‌ கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேரை‌ சி.பி.ஐ கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil youths kidnapped to Russia for Ukraine war


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->