16 கிலோ ஹெராயின் கடத்திய தமிழக வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், பெங்களூரு ரெயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலில் சந்தேகப்படும்படி இருந்த ஒரு நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அவர் வைத்திருந்த பைகளில் 16 கிலோ எடையுள்ள ஹெராயின் இருந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். 

மேலும், காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் எத்தியோப்பாவிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவர் டெல்லி சென்று அந்த போதைப்பொருட்களை ஒப்படைக்க சென்றபோது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 

இதனை தொடர்ந்து இதற்கு பின்னால் உள்ள மர்ம கும்பல் குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்துடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu youth arrested for smuggling 16 kg of heroin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->