கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகம்: மனைவி கொடூரமாகக் கொலை: ராயின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்..! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரின் பர்சுடி பகுதியை சேர்ந்த சாஹேப் முகர்ஜி என்பவர், செவிலியரான தனது மனைவி ஷில்பி முகர்ஜிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் போது ஏற்பட்ட ஆத்திரத்தில், வீட்டில் இருந்த மனைவியின் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் சாஹேப் முகர்ஜி, அங்கிருந்து சுந்தர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் தண்டவாளப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பர்சுடி காவல்துறையினர், ஷில்பியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், சுந்தர் நகர் காவல்துறையினர் ரயில் தண்டவாளத்திலிருந்து சாஹேப் முகர்ஜியின் உடலையும் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பர்சுடி காவல் நிலைய பொறுப்பாளர் அவினாஷ் குமார் கூறுகையில், சாஹேப் முகர்ஜி, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது செல்பேசி ஸ்டேட்டஸ் மூலமாகவும், தற்கொலைக் கடிதம் மூலமாகவும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த ஷில்பியின் சகோதரர் அமித் குமார், தனது சகோதரிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாகவும், தகவல் கிடைத்து வந்தபோது தங்கை கொலையுண்டுக் கிடந்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suspecting his wife was having an affair the husband killed her and then committed suicide by jumping in front of a train


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->