தேதி முடிவு பண்ணியாச்சு! ஆனால் பின்னர் தெரிவிக்கிறோம்! ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
Supreme Court notice in Sterlite case final hearing date decided
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்!
கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசு அழுவதாக கூறி அந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது

இதய்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது
இந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணை தொடங்கியது. நீண்ட காலமாக விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையைத்தான் வேதாந்த நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதற்கு தேதி முடிவு செய்து விட்டதாகவும், விரைவில் விசாரணைக்கு பட்டியலிட இருப்பதாகவும வேதாந்த நிறுவனத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
Supreme Court notice in Sterlite case final hearing date decided