ஜம்மு -காஷ்மீர் மாநில அந்தஸ்து வழக்கு: எட்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!
Supreme Court issues notice to Union government to respond within eight weeks on Jammu and Kashmir statehood issue
ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின் போது ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. இருப்பினும் தேர்தல் முடிந்து ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கபடவில்லை.
இந்நிலையில் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, ஜம்மு & காஷ்மீரின் நிலைமையை கவனிக்காமல் விட முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'தேர்தலுக்கு பிறகு மாநில அந்தஸ்து வழங்கப்படும்' என்று ஒன்றிய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் இப்போது ஏன் இந்த விவகாரம் இவ்வளவு பரபரப்பாக எழுப்பப்படுகிறது..?
இந்த விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பெறுவதற்காக 08 வாரங்கள் அவகாசம் வேண்டும்'. என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஒன்றிய அரசு, இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு கூறி குறித்த வழக்கை 08 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
Supreme Court issues notice to Union government to respond within eight weeks on Jammu and Kashmir statehood issue