பள்ளியை கட் அடித்துவிட்டு ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள்.. 3 பேர் நீரில் மூழ்கி பலி.!
Students went to bathe in the river after cutting off the school 3 drowned
பள்ளியை கட் அடித்து விட்டு குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் உள்ள துர்காப்பூர் கிராமத்தை ஒட்டி தாமோதர் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் ஒரு தடுப்பனையும் உள்ளது.இந்த நிலையில் இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 8 மாணவர்கள் நேற்று வகுப்பை கட் அடித்து விட்டு ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.

இதில் மாணவன் ஒருவன் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் சிக்கியுள்ளார். உடனடியாக அவனைக் காப்பாற்ற மேலும் இரண்டு மாணவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் மூன்று பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு 3 மாணவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Students went to bathe in the river after cutting off the school 3 drowned