விசித்திர கிராமம்! பல வருடமாக புதுமண பெண்கள் இறைச்சி சாப்பிடுவது தடை! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமம் ஒன்று உள்ளது.அங்கு ஒரு விசித்திரமான வழக்கம் அந்த கிராமத்து மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது,"ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால் அவள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட தடை" என்பது விதிக்கப்பட்டுள்ளது.

இது பல ஆண்டுகளுக்கு முன்பு 'காலரா' என்ற நோய் பரவிய போது கிராமத் தலைவர் 'சீதம்மா' மற்றும் 'மாரியம்மா' இருவரையும் வணங்கினார்.அப்போது 'காலரா வராவிட்டால் கிராமத்தில் மருமகள்கள் இறைச்சியைத் தொட மாட்டோம்' என்று சத்தியம் செய்தனர்.

இதை நம்பி இதுவரை இந்த வழக்கத்தைத் தொடர்கிறார்கள்.இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இந்தத் திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார். இந்த வெள்ளி அம்மனின் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

மேலும் இந்த கிராம மக்கள் தெரிவிப்பதாவது,"கிராமத்து குழந்தைகள் அல்லது ஆண்கள் யாராவது இறைச்சி சாப்பிட வேண்டியிருந்தால் அவர்கள் கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு சமையல் பாத்திரங்களில் சமைத்து, சாப்பிட்டு குளித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவார்கள்" என்று அதிர்ச்சியடையும் விதமாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

strange village For many years newlyweds have been forbidden to eat meat If you know reason you shocked


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->