மூதாட்டி மீது மிளகாய் பொடி தாக்குதல்…! - 2 பவுன் சங்கிலியுடன் மர்ம நபர் தப்பியோட்டம்!
Elderly woman attacked chili powder Mysterious man escapes 2 sovereign gold chain
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வேலு உடையாரின் மனைவி சின்னபொன்னு (85). நேற்று மதிய வேளையில், தன் வீட்டின் முன்பகுதியில் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென சின்னபொன்னுவின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி கண்களை எரியவிட்டார்.
வலியால் துடித்துக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடினான்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த துணிச்சலான கொள்ளை சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Elderly woman attacked chili powder Mysterious man escapes 2 sovereign gold chain