கடைக்குள் நடந்த அருவருப்புச் செயல்…5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிருஷ்ணாநகர் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சாம்பிராணி போடும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் காலேஷா (23). ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெட்டபஞ்சானி பகுதியைச் சேர்ந்த மகபூப்ஷெரீப்பின் மகன்.2023 நவம்பர் மாதம், ஒரு கடையில் சாம்பிராணி புகை போட சென்றபோது, அந்தப் புகை பிடிக்காததால் கடை உரிமையாளரும் வாடிக்கையாளர் பெண்ணும் வெளியே சென்றனர்.

அப்போது கடையின் உள்ளே அந்த பெண்ணின் 5 வயது மகள் தனியாக செல்போன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த தருணத்தை பயன்படுத்தி, கடை முழுவதும் புகை பரப்பிய காலேஷா, அச்சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு.

இதைக் கண்ட சிறுமியின் தாயும் கடை உரிமையாளரும் அதிர்ச்சியில் உறைந்து, உடனடியாக அவரை பிடித்து தாக்கி, பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, காலேஷாவை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசேல் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றம் நிரூபிக்கப்பட்டது” எனக் கூறி, காலேஷாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து, பலத்த காவல் பாதுகாப்புடன் காலேஷாவை போலீசார் வேனில் ஏற்றி மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

disgusting act took place inside shop 5yearold girl harassement Young man sentenced 5 years prison


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->