'விநோதய சித்தம்' படத்தை தொடர்ந்து ZEE5- இல் வெளியாகும் சமுத்திரகனியின் 'தடயம்'..!
Samuthirakanis Thadayam will be released on ZEE5
ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனியின் நடிப்பில், "தடயம்" எனும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த "தடயம்", சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பாகும்.
இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த "விநோதய சித்தம்" திரைப்படம் ZEE5-இல் வெளியாகி, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, "தடயம்" திரைப்படமும் ZEE5-இல் வெளியாகவுள்ளது. இந்த "தடயம்' திரைப்படத்தின் கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்பட வில்லை. இந்த தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Samuthirakanis Thadayam will be released on ZEE5