வினோதம்! போலீசார் வாயை அடைத்த திருடன்...! திருடிய வீட்டில் தூங்குவது தான் என் வழக்கம்...! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்த விவசாயி சீனிவாச ராவ் மற்றும் இவரது மனைவி ஜெயலட்சுமி . இவர்களது மகன் விசாகப்பட்டினத்திலுள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.சில காலமாக சீனிவாச ராவ் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிக் கொண்டு கிராமத்திலுள்ள விவசாய நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்வது வழக்கம்.

இதில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு, இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றனர். பிடரி கிராமத்தை சேர்ந்த திருடன் ஒருவன், வீடு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்து சீனிவாச ராவின் வீட்டிற்கு சென்றுள்ளான்.அங்கு வீட்டிலுள்ள வெள்ளி பொருட்கள் மற்ற பொருட்களை திருடிக் கொண்டு வெளியே செல்வதும், திருடப்பட்ட பொருட்களை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்துவதுமாக இருந்துள்ளான்.

பிறகு பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி தூங்கியுள்ளான்.இது கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்துள்ளான். மேலும், இரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத வீட்டில் விளக்கு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சீனிவாச ராவின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு காவலர்கள் சீனிவாச ராவ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மதுபோதையில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவனை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு பொருட்களை திருடி சென்று மது குடித்துவிட்டு மீண்டும் அதே வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதனைக் கேட்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strange thief who was silenced by police Its my habit to sleep house I stole from


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->