காஷ்மீரில் உறைநிலைக்கு மேல் பனிப்பொழிவு; பஹல்காமில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியசாகவும் பதிவு; பொதுமக்கள் கடும் அவதி..!
Snowfall above freezing point in Kashmir
ஜம்மு -காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் உயரமான மலைப்பகுதிகளில் கடுமையான பனிபொழிப்பு நிலவியதால் அங்குள்ள மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மாதத்தில் முதல் முறையாக உறைநிலைக்கு மேல் பனிப்பொழி உயர்ந்த காணப்பட்ட்டுள்ளதோடு, குறிப்பாக, புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியசாக காணப்பட்ட்டுள்ளது. அத்துடன், அமர்நாத் யாத்திரையின் முகாம்களான பஹல்காமில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் ‘சில்லாய் கலான்’ என்ற 40 நாள் கடுமையான குளிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கடுமையான குளிர் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கவுள்ளது. இதனால், லேசான மழை அல்லது பனிபொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Snowfall above freezing point in Kashmir