காஷ்மீரில் பதற்றம்: மஜல்டா பகுதியில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை..!
A fierce gun battle is underway between security forces and terrorists in the Majalta area of Kashmir
காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. குறித்த வனப்பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
இரு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் நடந்து வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அந்த பகுதியில் 2இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என காஷ்மீர் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வனத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் தப்பிசெல்ல முடியாத வகையில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
A fierce gun battle is underway between security forces and terrorists in the Majalta area of Kashmir