பாம்பிற்கு வந்த சோதனை...உடலை இறுக்கிய தங்க மோதிரம்...! - வினோத சம்பவம்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக தாக்கம் செலுத்தி வருகிறது. வெப்பத்தின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காடுகளில் வாழும் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வரத் தொடங்கியுள்ளன.

இதனால் வீடுகளில் தஞ்சமடையும் பாம்புகள் பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில், காசர்கோடு மாவட்டம் அடூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த பாம்பு ஒன்று, அங்கிருந்த மேசையின் மீது ஊர்ந்து சென்றபோது மேசையில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் அதன் உடலில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மிகுந்த கவனத்துடன் பாம்பை பிடித்து அதன் உடலில் சிக்கியிருந்த மோதிரத்தை சேதமின்றி அகற்றினர். பின்னர், பாம்பை பாதுகாப்பாக அருகிலுள்ள வனப்பகுதியில் விடுவித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

snake tested gold ring that tightened body Strange incident


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->