அதிர்ச்சி... சிக்கன் பப்ஸில் சுருண்டு கிடந்த பாம்பு..!!
snake found in chicken pups in telungana
சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் பாம்பு குட்டி கிடந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஜட்சர்லாவில் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பேக்கரியில் ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீசைலா வீட்டில் வாங்கி வந்த சிக்கன் பப்ஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த நிலையில் கிடந்த கூட்டி பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த பப்ஸை எடுத்துக் கொண்டு நேராக பேக்கரிக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
உரிமையாளரின் இந்த அலட்சியமான நடத்தையால் கடும் கோபமடைந்த ஸ்ரீசைலா காவல் நிலையத்தி புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
snake found in chicken pups in telungana