பிரதமர் மோடியை விமர்சித்த ராகுலை வெளுத்து வாங்கிய அமெரிக்க நடிகை..!
American actress slams Rahul Gandhi for criticizing PM Modi
டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று கூறி, காங்கிரஸ் ராகுல் காந்தி, 05 விஷயங்கள் என்ன என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு அமெரிக்க பிரபல நடிகையும், பாடகருமான மேரி மில்பென் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'ராகுல் சொல்வது மிகவும் தவறு என்றும் கண்டித்துள்ளார்.
அண்மையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா விரைவில் நிறுத்தும் என்று கூறினார். இதை விமர்சித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எக்ஸ் வலைதள பக்கத்தில் மோடியை கடுமையா விமர்சித்து பதிவவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிகாவின் பிரபல நடிகையும், பாடகருமான மேரி மில்பென் தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'நீங்கள் சொல்வது தவறு ராகுல். டிரம்பை கண்டு பிரதமர் மோடி பயப்படவில்லை. அமெரிக்காவின் விளையாட்டையும், ராஜதந்திரத்தையும் அவர் புரிந்து கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் எப்போதும் அமெரிக்க நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்துவது போல், பிரதமர் மோடியும் இந்தியாவுக்கு சிறந்ததைத் தான் செய்வார். நாட்டின் தலைவர்கள் என்பவர்கள் அப்படித்தான் செய்வார்கள். நான் அதை பாராட்டுகிறேன்.
அவர்கள் தங்களின் நாட்டுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறன். இந்த தலைமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்திய பிரதமராகும் வகையிலான புத்திசாலித்தனத்தை பெற்றிருக்கவில்லை.
எனவே. நீங்கள் மீண்டும் இந்தியாவை வெறுக்கிறேன் என்ற உங்களின் பிரசாரத்தை தொடருங்கள். அங்கு ஒரேயொரு பார்வையாளர் மட்டுமே உள்ளார், அது நீங்கள் தான்.' என்று கடுமையாக ராகுலை தாக்கி பதிவிட்டுள்ளார்.

மேரி மில்பென்
அமெரிக்காவின் பிரபல நடிகை மற்றும் பாடகர். 'ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே' என்ற பாடலை பாடியதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். பலமுறை இந்தியா, அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அத்துடன், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, மேடையில் மேரி மில்பென் இந்திய தேசிய கீதம் பாடியதோடு, பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெற அவரது பாதம் தொட்டு வணங்கிய வீடியோ காட்சிகள் அப்போதே இணையதளங்களில் பிரபலம் ஆகி, பெரும் வரவேற்பையும் பெற்றது.
English Summary
American actress slams Rahul Gandhi for criticizing PM Modi