சீனாவுக்கு எதிரான வரி விதிப்பில் இருந்து பின் வாங்கினாரா டிரம்ப்..?
Did Trump back down from tariffs on China
சீன அதிபர் ஜி ஜின் பிங்கை 02 வாரங்களில் சந்திக்கவுள்ளதாகவும், 100% வரி விதிப்பு நிலையானது அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவம்பர் 01-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்திருந்தார்.
இதனால், சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்தது. இந்த வரி விதிப்பிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு வாரங்களில், சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்திப்பேன் என்றும், 100% வரிகள் நீடிக்க முடியாதவை. இத்தகைய நடவடிக்கை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது. அவர்கள் என்னை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தியதாக என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதட்டங்களை குறைக்க வழி வகுக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Did Trump back down from tariffs on China