வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய தருணம்: கட்சித் தலைவர் தடுக்காமல் பிரச்சினையை தூண்டும் விதத்தில் செயல்பட்டாரா..?உயர்நீதிமன்றம் கேள்வி..! - Seithipunal
Seithipunal


கடந்த 07-ஆம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார் மோதியது. இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி.க.,வை சேர்ந்தவர்கள் தாக்கி காயப்படுத்தினர். அத்துடன், அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்த அவரை உள்ளே நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவம் தொடர்பாக, இரு தரப்பிலும் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை கோரி பார் கவுன்சில் இணைத்தலைவரான வழக்கறிஞர் கே. பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு தரப்பினர் மீதும் எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், 'இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த அரசியல் கட்சித் தலைவர் சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் பிரச்சினையை தூண்டும் விதத்தில் செயல்பட்டாரா..? கட்சியினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்' என்றும் நீதிபதி சதீஷ் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 02 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court asked what the police did when the lawyer was attacked by the VKC members


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->