வகை வகையான பாம்புகளை  வரதட்சனையான கொடுக்கும் விநோத திருமணம்.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் திருமணம் என்பது கலாச்சாரம் சார்ந்த பண்பாடாக கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு தம்பதியினரை இந்த சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாக திருமணம் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஆண், பெண் இருவரது வாழ்க்கையிலும் திருமணம் என்பது திருப்ப முறையாக அமைகிறது. அந்த வகையில் திருமணத்தின் போது செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு அர்த்தமும் உள்ளது.

இதில், பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு வரதட்சணையாக ஆபரணங்கள், பண்ட பாத்திரங்கள் மற்றும் கார் பைக் போன்ற சொகுசு பொருட்களை கொடுத்து வருகின்றனர். வரதட்சணை கேட்பது தவறு என்றாலும் சிலர் தங்களது மகளுக்கு கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு செய்கின்றனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாரா பழங்குடியின மக்கள் திருமணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் வினோத வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

பாம்பை வரதட்சணையாக கொடுக்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும் திருமணம் முழுமை அடையாது என்பதும் இந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண் வீட்டார் பேசுகையில் அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் 60 பாம்புகளை கொடுத்தோம் ஆனால் இப்போது 21 பாம்புகள் மட்டும் தான் கொடுக்கிறோம் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார். அதில் சாரைப்பாம்பு, பச்சை பாம்பு, நல்ல பாம்பு என பல வகை பாம்புகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Snake dowry marriage satishkar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->