ஆந்திராவில் சோகம் - பேருந்து மீது லாரி மோதி 6 பேர் பலி.!
six peoples died bus accident in andira
ஆந்திராவில் சோகம் - பேருந்து மீது லாரி மோதி 6 பேர் பலி.!
ஆந்திராவில் இன்று மாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தி மாநிலத்தில் உள்ள அன்னமயா மாவட்டத்தில் கடப்பாவில் இருந்து திருப்பதி நோக்கி பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து, அன்னமயா மாவட்டம் புள்ளம்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்துக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து மீது லாரி மோதி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples died bus accident in andira