ஆந்திராவை உலுக்கிய கோர விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி.!!
Six people killed in bus lorry collision in Andhra Palnadu district
ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்ததில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தேர்தலுக்காக சொந்த ஊருக்கு சென்று வாக்களித்துவிட்டு திரும்பிய போது, டிப்பர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முதலில் லாரி தீப்பிடித்த நிலையில், பேருந்துக்கும் தீ பரவியது. இதன் காரணமாக 2 ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தப்பட்ட முதல் கட்டமை விசாரணையில் இரு ஓட்டுநர்களும் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
English Summary
Six people killed in bus lorry collision in Andhra Palnadu district