அதிரவைத்த ஒடிசா காதல் கொலை...! 8 மாதங்களுக்கு பிறகு புதைத்த சடலம் கண்டெடுப்பு...! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்ட பராத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது 'நிரூபமா பரிதா', அப்பகுதியிலேயே இருக்கும் ஒரு தொழிலதிபர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்துவந்தார். இவர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்றார்.ஆனால் வீடு திரும்பவில்லை.

இதில் உறவினர்கள் அவரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், அவர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். அதனடிப்படையில், காவலர்கள்  விசாரணையை தொடங்கி, அவரது மொபைல் எண் தொடர்ந்து செயலிழந்த நிலையில் இருந்ததைக் கண்டறிந்தனர்.இதற்கிடையில், சில நாட்கள் கழித்து அந்த மொபைல் திடீரென சுவிட்ச் ஆன் செய்யப்பட்டதால், அவர் உயிருடன் இருக்கக்கூடும் என காவலர்கள் சந்தேகித்தனர்.

ஆனால், விசாரணை தீவிரமடைந்த நிலையில், நிரூபமாவிற்கு தெபாசிஷ் பிசோய் (26) என்ற காதலன் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவர் மின்சார பணியாளராக இருந்த தெபாசிஷை காவலர்கள் கைது செய்து விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதில் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகித்து, கோபத்தில் நிரூபமாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், உடலை குர்டா மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் புதைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், காவலர்கள் தவறான பாதையில் வழிநடத்தவே நிரூபமாவின் மொபைலை சில நிமிடங்களுக்கு ஆன் செய்ததாகவும் தெரிவித்தார்.அவரது வாக்குமூலத்தின் பேரில், காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் தேடுதல் நடத்தியதில், 8 மாதங்களாக காணாமல் போன நிரூபமாவின் சடலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை குறித்து காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking Odisha love murder Body found buried after 8 months


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->