தெலுங்கானாவில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 'மெபெட்ரோன்' போதைப்பொருள் பறிமுதல்; ஐடி நிபுணர் உட்பட 12 பேரை கைது செய்துள்ள மஹாராஷ்டிரா போலீசார்..!
Mephedrone worth Rs 12000 crore seized in Telangana and 12 people including IT expert arrested
தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதோடு, அதனை உற்பத்தி செய்துவந்த கும்பலை சேர்ந்த ஐடி நிபுணர் உட்பட 12 பேர் மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தெலுங்கானாவின் சேரமல்லி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை என்ற போர்வையில் ரகசியமாக போதை மருந்துகள் உற்பத்தி செய்து வந்துள்ளனர். குறித்த போதைப்பொருட்கள் மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி, மஹாராஷ்டிராவின் மீரா-பயந்தர், வசாய்-விரார் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஒரு மாதமாக தெரிறமாக கண்காணித்து வந்துள்ளனர். அதன்படி, 60-க்கும் மேற்பட் இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த சோதனையில் பெரிய போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் 12 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கைதான 12 பேரில் ஐடி நிபுணர் ஒருவரும் சிக்கியுள்ளதாகவும், அவர் தனது ரசாயன அறிவை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், மீரா சாலையில் கடந்த மாதம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பிடிபட்ட வங்கதேச பெண் ஒருவரும் தொடர்புள்ளவராக அறியப்பட்ட பாத்திமா முராத் ஷேக் என்கிற மொல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 35,000 லிட்டர் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் முகவர்கள் மூலம் மும்பைக்கு வழங்கப்பட்டதும், கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், இந்த கும்பலில் வெளி நாட்டவரின் ஈடுபாட்டின் காரணமாக இந்த வழக்கு சர்வதேச அளவிலும் விசாரிக்கப்படுகிறதாக போலீஸ் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Mephedrone worth Rs 12000 crore seized in Telangana and 12 people including IT expert arrested