ஆஸ்திரேலியா ஏ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர்: தமிழக வீரர்களுக்கும் இடம்..!
Shreyas Iyer named captain of Indian team for Australia A Test series
ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலியாக்கு எதிரான ஏ அணி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். லக்னோவில் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் போட்டியும், செப்டம்பர் 23-ஆம் தேதி, 02-வது டெஸ்ட் போட்டியும் தொடங்கவுள்ளது.
இந்தத் டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆசிய தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸை தேர்வு செய்யாததற்கு பிசிசிஐ கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதன்காரணமாக , அவரை ஆஸ்திரேலியா ஏ தொடருக்கு கேப்டனாக நியமித்துள்ளது. இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏ அணி வீரர்களின் முழு விபரம்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரேல், தேவ்தட் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது,மானவ் சுதர்,யாஷ் தாக்கூர்
ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன், 02-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.ராகுலும், முகமது சிராஜூம் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Shreyas Iyer named captain of Indian team for Australia A Test series