ஒடிசா ரயில் விபத்து.. சிபிஐ விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில் ஒரிசா ரயில் விபத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விபத்து நடைபெற்ற பகுதிகளை ஆய்வு செய்ததோடு பஹானாகா ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எல்லாம் தங்களின் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணை பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் தண்டவாளர்களை இணைக்கும் இன்டர் லாக்கிங் அமைப்பு முடக்கப்பட்டது.

கணினிமூலம் இயங்கும் இன்டர் லாக்கிங் அமைப்பை நிறுத்திவிட்டு ரயில் நிலைய ஊழியர்கள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருப்பது சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ரயில்வே ஊழியர்களின் அலட்சிய போக்கால் இந்த கோர விபத்து நடைபெற்றது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking info come out CBI investigation about Odisha train accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->