2025ல் ஐடி துறையில் அதிர்ச்சி! – 50 ஆயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம்! இனி எல்லாம் ai-தான்!அலறும் இந்திய ஐடி ஊழியர்கள்!
Shock in the IT sector in 2025 Up to 50 thousand people may be laid off Everything will be AI from now on Indian IT employees are screaming
இந்தியாவின் ஐடி துறையில் தற்போது மூடுபனி சூழ்ந்த காலம் நிலவுகிறது.தொடர்ச்சியான பணி நீக்கங்கள் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 50 ஆயிரம் ஐடி ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி எவ்வளவு வேகமாக நடந்தாலும்,அதை விட வேகமாகவே ஊழியர் நீக்க நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
டிசிஎஸ், மைக்ரோசாஃப்ட், அக்சென்ச்சர் போன்ற முன்னணி நிறுவனங்களிலேயேபணி நீக்கத்தின் அலை பல மாதங்களாக அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம்,டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம்“2026ம் ஆண்டுக்குள் தனது பணியாளர்களில் 2 சதவீதம் — அதாவது சுமார் 12 ஆயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்படும்” என அறிவித்தது.அந்த முடிவு இப்போது நடப்பில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், பிற ஐடி நிறுவனங்களும் மெல்லிய அழுத்தத்தின் கீழ் ஊழியர்களைராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தி,மறுப்பவர்களை நேரடியாக பணி நீக்கம் செய்து வருகின்றன.இதனால் எச்ஆரின் தொலைபேசி வந்தாலே ஐடி ஊழியர்கள் பயத்தில் அட்டெண்ட் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
பணி நீக்கத்தின் இந்த அலை, இப்போது 2025ல் பெரும் அளவிற்கு உயரும் என கூறப்படுகிறது.2023 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கு இடையில்சுமார் 25 ஆயிரம் ஐடி ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர்.ஆனால் இந்த ஆண்டு அது இரட்டிப்பு அளவுக்கு அதிகரித்து,
50 ஆயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இது ஏன் என்ற கேள்விக்கு முக்கிய காரணம் — ஏ.ஐ. (Artificial Intelligence).
ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்ததால், பல நிறுவனங்கள்மனிதர்களின் வேலைகளை தானியங்கி முறைமைகளால் மாற்றி,
சம்பளச் செலவை குறைக்க முயற்சி செய்து வருகின்றன.
இதில் பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களின் அனுபவம், திறமை இருந்தாலும்,
ஏஐ-க்கு இடமளிக்கும் புதிய துறைமைகள் அவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட HFS ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஃபெர்ஷ்ட்,“ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்திறனைப் பொருத்தே பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
புதிய ஆட்கள் சேர்ப்பும் குறைந்து விட்டது.2025ல் அமைதியான முறையில் பலர் வேலையை இழந்துவிட்டனர்,”என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீதி சர்மா கூறியதாவது:“2025ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் பணி நீக்கம் செய்யப்படலாம்.இதற்கு பிரதான காரணம் ஏஐ பயன்பாடு தான்.நிறுவனங்கள் ஏஐ மூலம் மனிதப் பணிகளை குறைத்து,சம்பளச் செலவை மிச்சப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன,”
என்றார்.
English Summary
Shock in the IT sector in 2025 Up to 50 thousand people may be laid off Everything will be AI from now on Indian IT employees are screaming