மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொடூரம்! மாணவி மீதான கும்பல் பலாத்காரம்-3 பேர் வலையில் சிக்கினர்!-நீதி கோரி எழுந்திருக்கும் மக்கள்
Brutality medical college campus Gang abuse student 3 people caught People rising up demanding justice
மேற்கு வங்காளத்தின் துர்காபூர் அருகே அமைந்துள்ள ஷோபாபூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இக்கல்லூரியில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் படித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில், அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர், அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனை கட்டிடத்தின் பின்புறம் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாணவியின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுப்படி, இச்சம்பவத்தில் ஐந்து பேர் வரை தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம், கடந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வை நினைவூட்டியுள்ளது.
அப்போது நாடு முழுவதும் பரவலான எதிர்ப்பு கிளம்பியிருந்தது; குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இதேபோல் மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவியொருவரின் மீது நடந்த இந்த வன்கொடுமை, சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், இன்னும் இரு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு குழுக்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்காள டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில்கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரியதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்திய தலைமை நீதிபதி தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
English Summary
Brutality medical college campus Gang abuse student 3 people caught People rising up demanding justice