இளம்பெண்ணை கைப்பிடிக்க உறவினரிடம் கைவரிசை காட்டிய வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal


4 ஆண்டு காதலில் இருந்த இளம்பெண்ணை கைப்பிடிக்க, உறவினரிடம் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடம் இருந்து 416 கிராம் தங்க நகைகள், ரூ.3.46 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஹெப்பகோடி பகுதியில்  ஹரீஷ் என்பவருடைய  கடையில் ஸ்ரேயாஸ் என்பவர் வேலை செய்து வந்துள்ளார் . ஸ்ரேயாஸ் 4 ஆண்டுகளாக இளம்பெண்ணை ஒருவரை காதலித்து வந்தநிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த இளம்பெண் கூறி வந்துள்ளார்.

ஆனால், ஸ்ரேயாசிடம் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய பணம் கைவசம் இல்லாததால் அவருடைய உறவினரான ஹரீஷிடம் நகை, பணம்  கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

இதையடுத்து , ஹரீஷ் வெளியூர் சென்றபோது அவருடைய வீட்டுக்குள் புகுந்து 416 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3.46 லட்சம் பணம் என கையில் கிடைத்தவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றார். அதனை தொடர்ந்து இதுபற்றி தெரிய வந்ததும் ஹரீஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அப்போது , சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தனர். அவர் ஹரீஷின் உறவினரான ஸ்ரேயாஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 416 கிராம் தங்க நகைகள், ரூ.3.46 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.52.32 லட்சம் ஆகும். காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man showed his influence to the relatives to hold a young womans hand Do you know what happened in the end?


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->