போலியோ எச்சரிக்கை! - 6 மாவட்டங்களில் சிறார்களுக்கு போலியோ தடுப்பு முகாம்
Polio alert Polio prevention camp children 6 districts
குழந்தைகள் போலியோ வைரஸால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலும் இன்று முக்கியமான 6 மாவட்டங்களில் பெரும் உற்சாகத்துடன் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.மேலும், போலியோ அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

இதில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து, நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி வைரஸை முற்றிலும் தடுக்கும் வல்லமை பெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என அனைத்துத் தளங்களிலும் மக்கள் பங்கேற்புடன் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
English Summary
Polio alert Polio prevention camp children 6 districts