கணவனை சொத்துக்காக புதைத்த மனைவி! ராஞ்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூரம்...! நடந்துஎன்ன...?
Wife buries husband for property Shocking incident in Ranchi What happened
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தில் நடந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த ராம்பாலி என்பவர், இரு மனைவிகளுடன் வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது. முதல் மனைவி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் வசித்து வந்தார்; இரண்டாவது மனைவி சம்பாவுடன் ராம்பாலி ராஞ்சியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ராம்பாலி திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை தொடங்கிய போலீசார், சம்பா மீது சந்தேகம் கொண்டு தீவிரமாக விசாரித்தனர். அப்போது, சம்பா தன் கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்து புதைத்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தினார்.

மேலும் விசாரணையில், ராம்பாலி தன்னுடைய நிலம் மற்றும் சொத்துக்களை விற்று, அந்த பணத்தை முதல் மனைவிக்கு கொடுத்தது தெரியவந்தது. இதை அறிந்த சம்பா கடும் கோபமடைந்து, கணவனை அழிக்க திட்டமிட்டுள்ளார். தனது உறவினர் விஷ்ணுவின் உதவியுடன் கூலிப்படையை ஏவி கொலை செய்து, உடலை புதைத்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
தற்போது சம்பா, அவரது உறவினர் விஷ்ணு உள்பட நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதைக்கப்பட்டிருந்த ராம்பாலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Wife buries husband for property Shocking incident in Ranchi What happened