ராஜஸ்தானில் அதிர்ச்சி.. இரண்டு முறை மாரடைப்பு.. 9 வயது சிறுமி மரணம்!
Shock in Rajasthantwo heart attacks9-year-old girl dies
ராஜஸ்தானில் 9 வயது சிறுமிக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள சீகர் மாவட்டம் டாண்டா-ராம்கர் பகுதியில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் பிராச்சி குமாவத் (9) மதிய உணவின்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவத்தன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மதிய உணவு இடைவேளையில், பிராச்சி டிபன் பாக்ஸை திறக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். பள்ளி ஊழியர்கள் அவளை உடனடியாக டாண்டா-ராம்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக சீகர் எஸ்.கே. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பியபோது, வழியிலேயே அவள் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவர் சுபாஷ் வர்மா தெரிவித்ததாவது:"பிராச்சி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது சுவாசத்தில் சிரமத்துடன் மயக்க நிலையில் இருந்தார். மருத்துவ பரிசோதனையில், சிறுமிக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது" என்றார்.
இந்த சம்பவம் சிறுமியின் குடும்பத்தினரை மற்றும் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Shock in Rajasthantwo heart attacks9-year-old girl dies